Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு மேம்பாலம் திறப்பு எப்போது…? அமைச்சர் சொன்ன தகவல்…!!!

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகளை பார்வையிட்ட பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுகையில், கோயம்பேடு மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தீபாவளிக்கு முன்னதாக கொண்டுவரும் விதமாக இரவு பகலாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் பாலத்தின் திறப்பு விழா தேதி இறுதி  செய்யப்படும். இதனை தொடர்ந்து வேளச்சேரி பாலமும் விரைவில் திறக்கப்படும்.

ஓஎம்ஆரில் நான்கு பாலங்களை அமைப்பதற்காக தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கலாச்சாரத்தை காட்டும் விதமாக படங்கள் இந்த மேம்பாலத்தில் இடம்பெற உள்ளன. எப்போதுமே பாலம் கட்டும் ஆட்சி திமுக தான். தென் மாவட்டத்தில் முதன் முறையாக பாலத்தை கட்டியது கலைஞர் கருணாநிதிதான். பத்துக்கும் மேலான பாலத்தை மேயராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |