தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைந்தததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில் குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் மண்டலம் வார்டு 82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு 192 அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரை திருத்தம் செய்து வண்ண குளம் என மாற்றம் செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தினார். இதனையடுத்து முதல்வர் அறிவுறுத்தலின்படி, அம்பத்தூர் மண்டலம் வார்டு 82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் அமைந்துள்ள “வண்ணான் குளம்” என்ற பெயரை திருத்தம் செய்து “வண்ணக்குளம்” என்று மாற்றி புதிய பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.