Categories
சினிமா தமிழ் சினிமா

மிகச் சிறந்த படங்களில் ஒன்று ‘பார்டர்’…. நடிகர் அருண் விஜய் ட்வீட்…!!!

பார்டர் திரைப்படம் எனது மிகச் சிறந்த படங்களில் ஒன்று என நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடித்துவிட்டு படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து படத்தை பார்த்துள்ளனர். அதன் பிறகு இயக்குனர், ஒளிப்பதிவாளர் என பலருக்கு நடிகர் அருண்விஜய் ஆப்பிள் ஐபேட்-ஐ பரிசாக வழங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த பரிசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ட்விட்டை குறிப்பிட்டு அருண் விஜய்யும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

அதில், “இந்த படத்தில் உங்கள் அற்புதமான வேலைக்கு அன்பின் அடையாளம் இது. இந்த அற்புதமான ஸ்கிரிப்டை எனக்கு வழங்கிய அறிவழகன் ஐயாவுக்கு நன்றி.  இந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்த ஆல் இன் பிக்சர்ஸுக்கும் நன்றி. பார்டர் எனது சிறந்த படங்களில் ஒன்றாகவும் & எனது வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகவும் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |