மோட்டார்சைக்கிளில் நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை கிராமத்தில் செந்தமிழ் என்பவர் வசித்து வந்தார். இவர் மொரப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நவலை ஏரிக்கரை அருகில் செந்தமிழ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதனால் படுகாயமடைந்த செந்தமிழை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தமிழ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.