Categories
மாநில செய்திகள்

தெருக்களில் பெயர் மாற்றம்….. ஜாதி ஒழிப்பில் இறங்கிய முதல்வர்…… சென்னையில் அதிரடி நடவடிக்கை…..!!

தமிழ்நாட்டிற்கு என்று  ஒரு பெருமைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் வட மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பெயருக்குப் பின்னால் சாதிப் போட்டுக் கொள்வது மிகவும் குறைந்த சதவிகிதத்தில் தான் காணப்படுகிறது.ஆனால் இது பெருமையான விஷயமாக கருதப்பட்டாலும் இதிலும் ஒரு சாபக்கேடு இருப்பது போல் தமிழகத்தில் பல ஊர்களில் பல தெருக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை வைத்துள்ளனர். இதனால் இந்த தெருக்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் இருப்பார்கள் என்ற தோற்றம் பலருக்கும் தோன்றுகின்றன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாதி ஒழிப்பை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அம்பத்தூர் மண்டலம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரை வண்ண குளம் என்று பெயர் மாற்றம் செய்ய முதல்வர் அறிவித்துள்ளார். இந்த பெயர் மாற்றம் செய்வதற்கு மாநகராட்சி சிறப்பு அதிகாரிகள் மூலம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், “முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததின் படி அம்பத்தூர் மண்டலம் மற்றும் சோளிங்கநல்லூர் மண்டலத்தில் அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற பெயரை  வண்ண குளம் என்ற புதிய பெயரில் மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |