Categories
சினிமா தமிழ் சினிமா

‘நெஞ்சுக்கு நீதி’ ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்… உதயநிதி ஸ்டாலினின் வைரல் டுவீட்…!!!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஆரி, சிவாங்கி, ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். மேலும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் பாலிவுட்டில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சென்னையில் உதயநிதி ஸ்டாலினை போனி கபூர் மற்றும் இணை தயாரிப்பாளர் ராகுல் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘எனது நெஞ்சுக்கு நீதி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர், நிர்வாக தயாரிப்பாளர் ராகுல் இருவரும் இன்று என்னை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் நிச்சயம் ஒலிக்கும். நன்றி’ என பதிவிட்டுள்ளார். தற்போது நெஞ்சுக்கு நீதி படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

Categories

Tech |