Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மர்ம முறையில் இறந்த மாணவி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக 8 மாதங்களுக்கு பின் தற்கொலைக்கு தூண்டியதாக மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாகல்பட்டி கிராமத்தில் பன்னீர்செல்வத்தின் மகள் செல்வராணி வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5.2.2021 அன்று மாணவி செல்வராணி தூக்கிட்டு மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி கலாவும், இவருடைய உறவினர் சத்யா ஆகிய 2 பேரும் தான் என் சாவுக்கு காரணம் என மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பின் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மூதாட்டி கலாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கின்ற சத்யாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |