மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை பராமரிப்பு தொடர்பான அறிவிப்புக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலானா அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது கோரிக்கையை ஏற்று மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவச் சிலையை தமிழக அரசு சார்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை மாண்புமிகு உள்துறை அமைச்சர் மூலம் தெரிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
Categories