இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்குவதற்கு தொடங்கியுள்ளனர். இதனால் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகமாகி வருவதால் பல்வேறு நிறுவனங்கள் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர். அதன்படி ஓலா நிறுவனம் s1 மற்றும் s1pro ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்து இதற்கான முன்பதிவும் நடைபெற்றது.
இதையடுத்து அதனை புக் செய்தவர்களும் மற்றும் வாங்க நினைப்பவர்களும் எப்போது இந்த ஸ்கூட்டர் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஓலா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தீபாவளி பண்டிகை முடிந்ததும் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவ் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குள் இதற்கான முன்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் அடுத்த கட்ட முன் பதிவு மீண்டும் நடைபெறும் என்று ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை ஓடும் திறன் கொண்டது என்றும், 10 வகையான நிறங்களில் இந்த ஸ்கூட்டர்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. S1pro ஸ்கூட்டர் விலை 1.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.