Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 25 ஆம் தேதி முதல் ரெட் அலர்ட் எச்சரிக்கை…. உஷார்….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வருகிற 25-ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மிக கனமழையால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரையில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |