தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Categories