Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி… மத்திய அரசு தான் முடிவு எடுக்கும்… ராதாகிருஷ்ணன் பேட்டி!!

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 6ஆவது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த மெகா முகாமானது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதனிடையே இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மக்களை வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது, கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்கும் எனவும், மழைக்காலங்களில் பரவும் நோய்களிலிருந்து மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |