Categories
தேசிய செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை… இதுதான் சரியான தீர்ப்பு… அதுவும் 30 நாட்களில்… நீதிமன்றம் அதிரடி…!!!

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசி சென்ற தாய் மாமனுக்கு மரண தண்டனை  விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜஸ்தான் மாநிலம், மீரட் நகரில் உள்ள நகவூர் மாவட்டம் படுகலன் பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 20ஆம் தேதி காணாமல் போனார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் அருகில் ஒரு முட்புதரில் சிறுமி பிணமாக கிடந்தார். பின்னர் அவரை மீட்ட காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அந்த சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது சிறுமியின் தாய் மாமனான 25 வயது நிரம்பிய தினேஷ் ரெட்டி என்பவரிடம் விசாரணை செய்தபோது அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். கடந்த 30 நாட்களாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Categories

Tech |