மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களை அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற இனிய சூழல் உருவாகும். இன்றைக்கு தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பண பரிவர்த்தனையும் திருப்திகரமாக இருக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவும் ஏற்படும். இன்று எதிலும் கூடுதல் கவனம் மட்டும் இருக்கட்டும். மனகவலை நீங்கும். காரிய வெற்றியும் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்கக்கூடிய ஆற்றல் மேலோங்கும். காரியத்தில் அனுகூலமும் இருக்கும். தன வரவு தாராளமாக இருக்கும். உங்களுடைய அறிவு திறமை இன்று வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். சமூகத்தில் நல்ல மதிப்பும் அந்தஸ்தும் கிடைக்கும். இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்துகொண்டு பாடங்களை படிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பான சூழலும் இருக்கும். அதே போல வெளியிடங்களுக்கு செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள்.
பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும் அது மட்டும் போதும். அது போலவே மேஷ ராசி அன்பர்களுக்கு வாழ்க்கைத் துணை மூலமாக அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும். இறைவனுக்காக இன்று சிறு தொகையை செலவிட நேரிடும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். புத்தி தெளிவு ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி காரியங்களை நீங்கள் தெளிவாக செய்வீர்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்