Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…. பிரபல தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை….!!

நைஜீரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

நைஜீரியாவை பொருத்தவரை ஐ.எஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாக உள்ளது. இதற்கிடையே நைஜீரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட்டின் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம் என்ற பெயரில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனாக அபு முஸப் அல் பர்நாவி செயல்பட்டு வந்தார். இவனை கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரிய பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் இறங்கி சுட்டுக்கொன்றனர்.

இவனது இறப்பைத் தொடர்ந்து இந்த அமைப்பின் புதிய தலைவராக மளம் போகோ என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவனும் நைஜீரிய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான் என நைஜீரியாவின் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் பபாஹீநா மஞ்சகுளா தெரிவித்தார்.

Categories

Tech |