Categories
உலக செய்திகள்

‘எது வேண்டுமானாலும் போடலாம்’…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…. அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் அனுமதி….!!

எந்த நிறுவனத்தின் தடுப்பூசியையும் மூன்றாவது தவணையாக செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதிலும் மூன்றாவது தவணையாக எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்ற சந்தேகம் எழும்பி வந்தது. இந்த நிலையில் தற்பொழுது அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “ஏற்கனவே பைசர் நிறுவனத்தின் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் மட்டும்  பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது எந்த நிறுவனத்தின் தடுப்பூசியையும்  பூஸ்டர் அதாவது மூன்றாவது தவணையாக செலுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |