Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

படிப்புக்கேற்ற வேலை கிடைகல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்பலவர் கட்டளை தெற்குத்தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ. படித்துள்ள நிலையில், அதற்கேற்ற வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரியப்பன் விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து அருந்தியுள்ளார். அதன்பின் மயக்கமடைந்த நிலையில் கிடந்த மாரியப்பனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் மாரியப்பனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் அங்கிருந்து தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாரியப்பனின் தாயார் லட்சுமி என்பவர் விக்ரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |