பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காக வருபவர்களிடம் இளம்பெண் ஒருவர் உதவி செய்வது போல் பாவனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் உசிலம்பட்டி காவல்துறையினர் அங்குள்ள ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வின் போது பணம் எடுப்பதற்கு உதவி செய்வதாக பாவனை செய்து மோசடியில் ஈடுபட்டது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிமேகலை என்பது தெரியவந்துள்ளது.
அதன்பின் மோசடியில் ஈடுபட்ட குற்றதிற்காக உசிலம்பட்டி காவல்துறையினர் மணிமேகலையை கைது செய்துள்ளனர். மேலும் மணிமேகலையிடமிருந்து 32,500 ரூபாய் பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணிமேகலை பல்வேறு இடங்களில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.