ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் ‘வலிமை சிமெண்ட்’ அறிமுகமாகும் என்று அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அரசு சிமெண்ட் என்ற பெயருடன் வலிமை என்ற பெயர் கொண்ட புதிய சிமெண்ட் உருவாக்கப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு அந்த சிமெண்ட் விற்பனைக்கு வரும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது சிமெண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும், ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் வலிமை சிமெண்ட் அறிமுகமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வலிமை சிமெண்ட் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது என்று அவர் கூறினார். முதற்கட்டமாக மாதம்தோறும் 30 ஆயிரம் மெட்ரிக் டன் என்கின்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.