Categories
இந்திய சினிமா சினிமா

யூடியூப் சேனல்கள் மீது சமந்தா வழக்குப்பதிவு…. வதந்திகள் பரப்பியதாக புகார்….!!

யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

மேலும், சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளத்தில் நிறைய வதந்திகள் பரவியது. இதனால், சமந்தா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். குறிப்பாக, சில தெலுங்கு யூடியூப் சேனல்கள் சமந்தாவிற்கும் உடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜூகல்கர்கும் தொடர்பு இருப்பதாக வதந்தி பரப்பினர்.

சமந்தா என் சகோதரி போன்றவர்.. தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீர்கள்..  ப்ரீத்தம் பேட்டி! | Samanthas hair stylist Preetham Jukalker has reacted to  these rumours - Tamil Filmibeat

இதனை சமந்தா மறுத்தபோதிலும், வதந்திகள் தொடர்ந்து வண்ணமிருந்தன. இந்நிலையில், தன்னை பற்றி தவறான தகவல்களை பகிர்ந்து சில யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா. மேலும், ஓய்வு பெற்ற மருத்துவர் வெங்கடராவ் மீதும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்குகள் விரைவில் தெலுங்கானா மாநிலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன.

Categories

Tech |