மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் நல்ல செயலுக்கான பாராட்டுக்கள் கண்டிப்பாக இன்று வந்து சேரும். மனதில் உற்சாகம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத அழகு சாதன பொருட்களை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். ஒவ்வாத பொருட்கள் ஏதேனும் இருந்தால் தூர தூக்கி போடுவது நல்லது. இன்று அடுத்தவரிடம் பேசும்போது யாரைப்பற்றியும் விமர்சிக்காமல் பேசுங்கள். பணவரவு கொஞ்சம் தாமதம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் பின்தங்கிய நிலையை சந்திக்க கூடும். கூடுதலாக பாடங்களை ஒதிக்கி படிப்பது நல்லது. இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். விருந்தினர்கள் வந்து செல்வார்கள். அதனால் கொஞ்சம் செலவு இருக்கும். பணவரவு ஓரளவு தான் எதிர்பார்த்தபடி இருக்கும்.
நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது நிதானமாக செல்லுங்கள். காரியத்தை செய்யும்போது கவனமாக செய்யுங்கள். மிக முக்கியமாக நீங்கள் இன்று யாரிடமும் எந்த விதமான பொறுப்புகளையும் கொடுக்க வேண்டாம் .நீங்களே அந்த காரியத்தை முன் நின்று செய்வது நல்லது. அதேபோல் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கான யோகங்கள் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு மனம் மகிழும் படியான சம்பவம் நடக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்