Categories
உலக செய்திகள்

இதிலிருந்து உருவாகும்…. கொடியவகை நோய்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

அமெரிக்காவில் வெங்காயத்தில் இருந்து கொடியவகை வைரஸ் தாக்கியதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்னர்.

அமெரிக்காவின் 37 மாகாணங்களில் சுமார் 650 பேர் புதியவகை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றுக்கு salmonella என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மெக்சிகோ நாட்டின் சிவாவா என்னும் நகரத்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் மூலம் தான் கொடியவகை வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் முழு சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் உள்ளிட்ட வெங்காயங்களை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க நோய் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “பச்சை வெங்காயம் சேர்த்த உணவுகளை சாப்பிட்டவர்களில் தான் 75 சதவீத மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இந்த salmonella நோய் முதலில் குடலை பாதித்து, இரைப்பை நோய்களுக்கு வழி வகுக்கிறது. பின்னர், Typhoid காய்ச்சல் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதும், வைரஸ் பெரும்பாலும் விலங்குகள் மற்றும் மனித குடல்களில் வாழ்கிறது என்றும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் வயிற்று போக்கு, காய்ச்சல், வயிற்று பிடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளது. மேலும் salmonella நோய் தொற்று 6 மணி நேரம் முதல் தொடங்கி 4-7 நாட்கள் வரை நீடிக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |