Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் இனி பழைய முறை…. அரசு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. அதில் கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த முறைப்படி ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க முடியும். தற்போது பயோமெட்ரிக் அருவியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதனால் கைரேகை பதிவு ஆகாத காரணத்தால் ரேஷன் அட்டைதாரர்கள் பொருள்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனை சரிசெய்ய கோரி பொது மக்களும் ரேஷன் கடை ஊழியர்களும் கோரிக்கை விடுத்தனர். வயதானவர்கள் கை ரேகைகளின் தேய்வு மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதால் அவர்களின் கைரேகை பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவாகவில்லை.அதனால் அவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும் என்று உணவு வழங்கல் துறை உத்தரவிட்டது. இதையடுத்து பயோமெட்ரிக் முறை விரல் ரேகையை மாவட்ட தாலுகா அலுவலகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் திருத்தம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பெரும்பாலும் முதியவர்களின் விரல் ரேகை பதிவு ஆகாமல் உள்ளது. அதனால் ரேஷன் பொருள் வாங்க முடியாத சூழல் உருவாகிறது. இந்நிலையில் அதனை சரிசெய்ய பழைய முறைப்படி ஏடுகளில் பதிவு செய்து அதன் பிறகு பொருட்கள் வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் இனி கைரேகை பதிவு இல்லாமல் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |