Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “பணியை நேர்த்தியுடன் செய்வீர்கள்”… நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று சிறு பணியையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையை கொடுக்கும். மாமன் மைத்துனருக்கு உதவிகளைச் செய்வீர்கள். இன்று சுற்றுலா சென்றுவர பயணத்திட்டம் உருவாகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒரு வகையில் வாக்குவாதம் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். சகோதர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனமாக இருங்கள். அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்யுங்கள். இன்று நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் இருக்கும்.

வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். பொறுப்புகள் கூடும் என்பதால் உத்தியோகத்தில் கொஞ்சம் உழைப்பு அதிகரிக்கும். அரசாங்கத்திடம் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். பண பரிவர்த்தனையில்  கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி செல்வ நிலையை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |