உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். இதில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி முன்னிலை படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
20 லட்சம் அரசு வேலைகள், மின் கட்டணம் ரத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு ஆகியவை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெண்களுக்கென்று தனி தேர்தல் அறிக்கை அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.