மத்திய பிரதேச மாநிலத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தலானது வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பகுதிகளை கைப்பற்றுவதற்காக ஆளும் பாஜக அரசு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து இந்த மூன்று தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அப்பகுதியில் பெண் வேட்பாளராக ப்ரத்திமா பாக்ரியை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் ராய்கான் பகுதியில் பெண் வேட்பாளரான ப்ரத்திமா பாக்ரிக்கு ஆதரவாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அந்த மேடையில் ப்ரத்திமா பாக்ரியா நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த பாஜக அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் ப்ரத்திமா பாக்ரியின் கூந்தலில் கையை வைத்துச் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் பேசும் சாக்கில் தனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ப்ரத்திமா பாக்ரியின் தொடையில் பிரஜேந்திர சிங்க் கை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.