Categories
மாநில செய்திகள்

இந்த வருடம் தீபாவளிக்கு…. புதிய வண்ணமயமான ஆடைகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தமிழ் தரி தொகுப்பு ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் புதுமையான ஆடைகள் தயாரிப்பின் தமிழ் தறி தொகுப்பு இன்று தொடங்கி வைக்கப்பட்டது.அதன்படி குழந்தைகளுக்கு முழுமையாக பருத்தியில் தயாரிக்கப்பட்ட மென்மையான ஆர்கானிக் ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து விதமான ஆடைகளும் இடம்பெற்றுள்ளன.

பெண்களோடு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பல்வேறு ஆடைகளின் புதிய வடிவமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. 50 புதிய வடிவமைப்புகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அடங்கிய கைத்தறி தொகுப்பினை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பட்டு சேலைகளில் உள்ள சரி கைகளில் தங்கம் மற்றும் வெள்ளி அளவீடுகள் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதமாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் உத்திரவாத அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்களை கவரும் விதமாக பல்வேறு பிராண்டட் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதனால் இந்த தீபாவளி வெகு விமர்சையாக மற்றும் வண்ணமயமாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |