Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “பக்தியில் நாட்டம் செல்லும்”… நண்பரிடம் சின்ன பிரச்சனை வரக்கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பணி நிறைவேற பொறுமை அவசியம். தொழிலில் உள்ள குறைகளை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதத்தை கொடுக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் நிம்மதியை கொடுக்கும். இன்று வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் செல்லும். ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நெருங்கிய நண்பரிடம் கொஞ்சம் சின்ன பிரச்சனைகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையை கையாளுங்கள். கல்வியில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். உங்களுடைய பணக் கஷ்டங்கள் தீரும். அதேபோல கடன்கள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகிச்செல்லும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பேசும் பொழுது நீங்கள் நிதானமாகப் பேசுங்கள். வெளியூர் பயணம் அலைச்சல் தரக் கூடிய அளவில் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மனம் திடீரென்று குழம்பி கொள்ளும். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் பொறுமையாக இருங்கள். நடப்பது உங்களுக்கு நல்லவையாக இருக்கும். அது போல நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும். செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |