Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் தயாரிப்பு படம்…. இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டியில் தேர்வு…. திரையுலக பிரபலங்கள் வாழ்த்து….!!

‘கூழாங்கல்’ திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கார் பட்டியலில் தேர்வாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார்.

விருதுகளை அள்ளி குவித்து வரும் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா படம்

சமீபத்தில், இவர் தயாரிப்பில் ‘கூழாங்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வினோத்ராஜ்  இயக்கி உள்ளார். ஏற்கனவே, சிறந்த படத்திற்கான பல விருதுகளை இந்த படம் வாங்கியுள்ளது. இந்நிலையில், ஆஸ்கார் போட்டியில் இந்தியா சார்பாக ”கூழாங்கல்” படம் தேர்வாகியுள்ளது. இதற்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |