விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் சீர்திருத்தம் தேவைப்படும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை இந்த காரியம் முடியுமோ முடியாதோ என்ற மன குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எதை பற்றியும் கவலை வேண்டாம். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய கவலை இருக்கும். சக மாணவருடன் வாக்குவாதங்கள் இல்லாமல் பழகுங்கள் போதும். அடுத்தவரின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருங்கள். அது போலவே புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது கவனமாக இருங்கள். இன்று தயவு செய்து புதிய முதலீடுகள் மட்டும் ஏதும் வேண்டாம். அதற்கான நேரம் வரும் வரை காத்திருந்து நாம் செய்து கொள்ளலாம். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தாரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்போதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் சொல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய செல்வாக்கு உயரும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்