மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துதியம்மாள்புரம் கிராமத்தில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு வரண்டாவில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காம்பவுண்டு சுவர் கேட்டை பூட்டுப் போட்டு பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து சாமுவேல் ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாமுவேல் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.