Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படத்தில் அபர்ணா தாஸ் என்ன கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் யோகி பாபு, மலையாள நடிகை அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Aparna Das - Thalapathy 65 | Mollywood actress Aparna Das is 'super duper  excited' to be a part of Vijay-starrer Thalapathy 65

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது 75% நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் அபர்ணா தாஸ் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 

Categories

Tech |