உணவகங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளும் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வழங்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளங்களுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடு நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் மாணவர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுவார்கள்.
நவம்பர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்கள் என்ற நிலையில், 100 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள் அனைத்து விதமான கடைகளுக்கும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பொருட்களை வாங்குவதற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக அனைத்து வகையான கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேர கட்டுப்பாடின்றி கடைகள் செயல்படலாம்.
அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்த அனுமதி. கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.