தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், கேரளாவை தவிர பிற மாநிலங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்து 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.