சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.கே.எஸ்.கார்டன் பகுதியில் ஒருவர் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தினகரன் என்பவரின் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது நாட்டு துப்பாக்கியை அனுமதியின்றி அவர் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து தினகரனை கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.