Categories
அரசியல் மாநில செய்திகள்

அழிவை நோக்கிச் செல்கிறதா அம்மா உணவகம்…? கொந்தளித்த கமல்…!!!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் அழிவை நோக்கி செல்கிறதா? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றும் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. இதில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்று வருகின்றன.

இந்த நிலையில் திமுக அரசு அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணம் இல்லை என்று அறிவித்திருந்தது. ஆனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களை நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதற்கு காரணம் அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்க காரணம் என்று கூறப்படுகிறது. அம்மா உணவகங்களில் இரவு உணவுக்கு சப்பாத்தி தயாரிக்கப்பட்டு வந்தது. இது அரசு மருத்துவமனை நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், முதியோர் போன்றோருக்குப் பயனுள்ளதாக இருந்தது.

இப்போது திடீர் மாற்றமாக சப்பாத்திக்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்படுகிறது. ஏழை எளியவர்களின் பசியாற்றும் இந்தத் திட்டத்தை முந்தைய ஆட்சியாளர்களை விட சிறப்பாக செயல்படுத்துவதே அரசுக்கு பெருமை தருவதாக இருக்க முடியும். அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாகச் செயல்படுவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |