Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள்…. எதற்கெல்லாம் அனுமதி?…. எதற்கெல்லாம் தடை?…. !!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

* அனைத்து வகை கடைகள், மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.

*அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில்  பயிற்சிகள்,  விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை  தேவைகளுக்காக  நீச்சல் குளங்களை  பயன்படுத்தவும் அனுமதிகப்படுகிறது.

* திரையரங்குகள் நூறு சதவீதம் பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு  நடைமுறைகளைப் பின்பற்றி  செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கூட்ட அரங்குகளில்  அனைத்து வகையான  கலாச்சார  நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-வது வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும்

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

*மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும்,  மாநிலங்களுக்கு இடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர்சாதன  பொது பேருந்து போக்குவரத்து, 100 சதவீத இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து  பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

* அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு  பயிற்சி நிலையங்கள் நூறு சதவீத பயிற்சியாளர்களுடன் இயங்க அனுமதி

* தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள்/ கலைஞர்களுடன் அனைத்து வகை படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.  பங்குபெறும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை

திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |