Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடந்த திருமண ஏற்பாடு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரி செல்ல ஆர்வத்துடன் இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் அவரைப் படிக்க வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் திருமண ஏற்பாடு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த சுதி மன உளைச்சலில் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென சுதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக உறவினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |