தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு கற்றல் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான அனைத்து பருவ தேர்வு களும் நேரடியாகவே நடத்தப்படும் என்றும் ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் மாதம் முதல் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பருவத் தேர்வுகளை நேரில் வந்து வகுப்பறையில் பழையபடி எழுதுவார்கள். மேலும் கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் போது அனைத்து கல்லூரிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.