பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமராபுரம் பகுதியில் சுனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பிராணிகள் நல ஆர்வலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 7 மாடுகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதாக சுனிதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுனிதா வேனை நிறுத்தியுள்ளார்.
ஆனால் வேனிலிருந்த முனிப்பாண்டி மற்றும் சதீஷ் ஆகியோர் சுனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுனிதா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனியாண்டி மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.