சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒருவரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கூகுடி ஊராட்சி அறநூற்றிவயல் கிராமத்தில் உள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் திருவாடனை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த ஆற்றில் சிலர் மண்ணள்ளி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக மணல் அள்ளிக் கொண்டு அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக தப்பி ஓடியுள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் விரட்டி பாஸ்கரன் என்பவரை மடக்கி பிடித்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கரன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்த காவல்துறையினர் அங்கிருந்த காரை பாரிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய மணக்குடியை சேர்ந்த பாண்டி, கட்டவிளாகம் பகுதியை சேர்ந்த மதி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.