தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 6 வது கட்ட தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. அந்த முகாமுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். காப்பனாமங்கலம், குடவாசல் மற்றும் கொடிக்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதியம் 1.30 வரை நிலவரப்படி 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று 500 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று 50,000 இலக்குகள் நிர்ணயிக்கபட்டதாக தெரிவித்தார்.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 8,30,00,000 மதிப்பில் சுகாதாரம் ச கட்டிடங்கள் சீரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும் என்று கூறினார். அதனை தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக கூறிய புகாரில் அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் அறிக்கை சமர்ப்பித்த பின் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேவையான தடுப்பூசிகள் உள்ளது என்றும் 66,00,000 தடுப்பூசிகள் கையிருப்பு வைத்து 6 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்தது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் உலக சுகாதார நிறுவனமும் அறிவிப்பு வெளியிட்டால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதையடுத்து அமெரிக்கா இங்கிலாந்து சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என்று விதிமுறைகளை பொதுமக்கள் மீறக்கூடாது தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் கொரோனா பரவலுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்வது மட்டும்தான் ஒரே தீர்வு. எனவே சில மாவட்டங்களில் மது பிரியர்கள் தடுப்புசி செலுத்திக் கொண்டால் மட்டுமே மது விற்பனை செய்யப்படும். மேலும் மது பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் முகாம் தற்போது சனிக்கிழமை நடைபெற்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதால் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.