Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன்… தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு…!!!!

தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை இன்று ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார் .

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தமிழக கவர்னர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழகத்தின் கவர்னராக பதவி ஏற்ற பின்பு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் டெல்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.

Categories

Tech |