இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூட்டுறவு மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேவகா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு அன்பு, கார்த்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 22 – ஆம் தேதியன்று அய்யனார் தனது இருசக்கர வாகனத்தில் கொல்லங்கொண்டான் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி அய்யனாரின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் அய்யனாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அய்யனாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.