Categories
தேசிய செய்திகள்

12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்பு… உத்தரகாண்டில் சோகம்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்  மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஹர்சில்லில் இருந்து இமாசல பிரதேசத்தின் தொடர்புடைய பகுதியில் மலையேற்றம் செய்வதற்காக இரண்டு மலையேற்ற குழுக்களை சேர்ந்த 22 வீரர்கள் மலை ஏற்றத்திற்கு புறப்பட்டனர். அக்டோபர் 17ஆம் தேதி மலையேற்றம் செய்ய கிளம்பியவர்கள் அக்டோபர் 19ஆம் தேதி சித்குல் என்ற பகுதியை அடையலாம் என்று திட்டம் போட்டனர் ஆனால் வழியிலேயே அவர் தொலைந்த போய்விட்டனர்.

இந்நிலையில் தொலைந்து போனவர்களில் 12 பேரின் உடல்களை மீட்பு பணியினர் மீட்டுள்ளனர். இதில் ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை காணவில்லை. 32 பேர் கொண்ட குழு அவர்களை மீட்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது.

Categories

Tech |