மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தன் பாளையம் பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரங்கநாதனின் சகோதரி வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் மட்டும் தனியாக இருந்ததை அறிந்த ரங்கநாதன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரங்கநாதனை கைது செய்துள்ளனர். பின்னர் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றதில் தற்போது அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அந்தத் தீர்ப்பில் ரங்கநாதனின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அபராதத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.