தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் ட்ரோன் மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். கண்காணிப்பை அதிகரித்தால் மட்டும் தொற்று குறையாது. மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும். சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களை கடைகளில் அனுமதித்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.