Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு…. அலர்ட்..அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரையில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |