Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா அசத்தும் சீனா..! இனி அவங்களும் திரைப்படம் பார்க்கலாம்… திரையரங்கில் புதிய முயற்சி..!!

சீனாவில் மாற்றுத்திறனாளிகளும் திரைப்படங்களை ரசிக்கும் வகையில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு பிரத்தியேக திரையரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் பிரத்தியேக திரையரங்கம் ஒன்று பார்வை குறைபாடு உள்ள மாற்று திறனாளிகளுக்காக செயல்பட்டு வருகிறது. அதாவது சீனாவில் பார்வை குறைபாட்டால் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களும் திரைப்படங்களை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீனாவில் சினிமா திரையரங்கில் பின்னணி குரல் மூலம் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் அனைத்தும் காட்சி வாரியாக விவரிக்கப்படுகிறது.

மேலும் நடிகர்களின் முகபாவனைகள் மற்றும் உணர்ச்சிகளை பின்னணி குரல் மூலம் கதை சொல்லும் நபர் தத்ரூபமாக விவரிப்பதால் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு திரைப்படத்தை காட்சியாக கண்டதுபோல் அனுபவம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |