தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 6000ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக மத்திய பணிமனை, அடையாறு, திருவான்மியூர், திருவொற்றியூர் உள்ளிட்ட 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் நவீனப் படுத்தப்பட்டுள்ளன. படிநிலைகளில் வணிக வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது.
இன்ஜின், சேஸ் உள்ளிட்ட நல்ல நிலையில் உள்ள 1500 பழைய பேருந்துகளுக்கு கூண்டு கட்ட முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. போக்குவரத்து பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குழு தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தியும் முடிவு எடுக்கப்படும். மேலும் புதிதாக 2,213 மற்றும் 500 மின்சார பேருந்து தலித் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண கட்டண பேருந்துகளில் தினசரி 38 லட்சம் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 6000 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்கள் பாதித்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.